இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலேEn Meedpar Uyirodirukkaiyilae

எழுதியவர் Words
ஞா. சாமுவேல் ஐயர்

பல்லவி Chorus

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்en meedpar uyirodirukkaiyilae enag

கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமேkenna kuraivundu? nee sol, manamae

சரணம் 1 Verse 1

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,ennuyir meedkavae thannuyir koduthor,

என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;ennodirukkavae ezhunthirunthor;

விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,vinnula kuyarnthor, unnadhanjiranthor,

மித்திரனே சுகபத்திர மருளும்mithiranae sugapathira marulum

சரணம் 2 Verse 2

பாபமோ, மரணமோ, நரகமோ,பேயோpaapamo, maranamo, naragamo,peyo

பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,payanthu nadungida jeyanj siranthor,

சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்;saapamae theerthor sarkurunaadhan;

சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்sanjalaminiyen? nenjame, magizhaay

சரணம் 3 Verse 3

ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,aasi seythiduvaar, arulmiga alippaar,

அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;ambaran thanilenakkaay jepippaar;

மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;mosamae maraippaar, munnamae nadappaar;

மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்modsavazhi sadhyam vaasal uyirenum

சரணம் 4 Verse 4

கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,kavalaigal theerppaar, kanneer thudaippaar,

கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;kadaisimattung kaividaa thiruppaar;

பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,pavamanippalippaar, paakkiyang koduppaar,

பரம பதவியினுள் என்றனை எடுப்பார்parama padhaviyinul endranai eduppaar

சரணம் 5 Verse 5

போனது போகட்டும், புவிவசை பேசட்டும்,ponadhu pogattum, puvivasai pesattum,

பொல்லான் அம்புக ளெய்திடட்டும்,pollaan ambuga leythidattum,

ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்,aanadhu aagattum, arulmazhai peythidum,

அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்anbumigum perinba menakkarul

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us