சத்தாய் நிஷ்களமாய்Sathaay Nishkalamaay
- எழுதியவர் Words
- எச். ஏ. கிருஷ்ண பிள்ளை
பல்லவி Chorus
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்,sathaay nishkalamaay orusaamiya mumiladhaay,
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே,sithaay aananthamaayth thigazhkindra thirithuvame,
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-து;ethaal naayadiyen kadaitheruvan enbavantheern-thu;
அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?athaa, unnaiyallaal enakkaarthunai, yaarurave?
சரணம் 1 Verse 1
எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்emmaa vikkurugi uyireenthu puranthadharkor
கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய்,kaimmaa rundugolo? kadaigaarung kaiyadaiyaay,
சும்மாரட்சணைசெய், சொல்சுதந்தரம் யாதுமிலேன்,summaaradsanaisey, solsudhantharam yaadhumilen,
அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?ammaan, unnaiyallaal enakkaarthunai, yaarurave?
சரணம் 2 Verse 2
திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக்thiraiser vembavamaam kadalmoozhkiya theeyaremaig
கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்,karaiserth thuykka vendrae punaiyaayinai kanniliyaan,
பரசேன் பற்றுகிலேன்; என்னைப்பற்றிய பற்றுவிடாய்,parasen patrugilen; ennaippatriya patruvidaay,
அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?arase, unnaiyallaal enakkaarthunai, yaarurave?
சரணம் 3 Verse 3
தாயே, தந்தைதமர், குருசம்பத்து நட்பெவையும்thaaye, thanthaidhamar, kurusambathu nadpevaiyum
நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண்;neeyae emberumaan, kadhiverilai ninnayangaan;
'ஏயே' என்றிகழு உலகோடெனக் கென்னுரிமை?'eye' endrigazhu ulagodenag kennurimai?
ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?aaye, unnaiyallaal enakkaarthunai, yaarurave?
சரணம் 4 Verse 4
பித்தே றிச்சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவத்தேpithae ricchuzhalum jegappeypididh thuppavathae
செத்தேன்; உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய்;sethen; unnarulaal pizhaithenmaru jenmamadhaay;
எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்-றுetho shangalaiyum poruthendrum irangugaven-ru
அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?athaa, unnaiyallaal enakkaarthunai, yaarurave?
சரணம் 5 Verse 5
துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்thuppaar sinthaiyilen maraintheettiya tholvinaiyum
தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள,thappaa theveliyaa nadunaalenaidh thaangikkolla,
இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்ippaa ruyyavendrae manukkolame tutha engal
அப்பா உன்னையல்லால் எனக்கார் துணை, யாருறவே?appaa unnaiyallaal enakkaar thunai, yaarurave?
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us